காங்கிரஸின் தொழிற்சங்கமான INTUC மாநில செயற்குழு கூட்டத்தில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், பேனரை கிழித்து முழக்கங்களை எழுப்பினர்.
திண்டுக்கல்லில் காங்கிரஸின் தொழிற்சங்கமான INTUC-ன் 252-வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் தொழிற்சங்க மாநிலத் தலைவர் ஜெகநாதன் தரப்பினருக்கும், முன்னாள் மாநில செயலாளர் பன்னீர் செல்வம் தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதம் தள்ளு முள்ளாக மாறியது.
இதையடுத்து இரு தரப்பினரும் கூட்ட அரங்கில் இருந்த பேனர்களை கிழித்து கோஷங்களை எழுப்பியதால் சலசலப்பு ஏற்பட்டது.