மதுரை மேலூர் பகுதியில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தை, சாலை இருபுறமும் நின்று பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டு ரசித்தனர்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 வது பிறந்தநாளை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி பந்தயம் மேலூர்-திருவாதவூர் பிரதான சாலையில் நடைபெற்றது.
இதில், 10 பெரிய மாடு ஜோடிகளும், 39 சிறிய மாடு ஜோடிகளும் பங்கேற்றன. போட்டி துவங்கியதும் காளைகள் சீறி பாய்ந்து இலக்கை நோக்கி ஓடின.
அப்பொழுது ஒரு மாட்டு வண்டியின் சக்கரம் முறிந்த நிலையில், அதனை பொருட்படுத்தாத உரிமையாளர் காளைகளை விரட்டியப்படி பந்தய தூரத்தை அடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.