கோவையில் நடைபெற்ற அறிவியல் மற்றும் இயந்திரவியல் கண்காட்சியில், பள்ளி மாணவர்கள் தங்களது படைப்புகளை காட்சிக்கு வைத்து அசத்தினர்.
சின்னவேடம்பட்டி பகுதியில் செயல்படும் தனியார் டெக்னோ பள்ளியில், அறிவியல் மற்றும் இயந்திரவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்த அறிவியல் கண்காட்சியில் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர்.
குறிப்பாக AI தொழில்நுட்பத்தை பயன்படுத்திய கண்டுபிடிப்புகளும், விண்வெளித்துறையில் அறிவியலின் பங்களிப்பு மற்றும் பார்வை மாற்றுத்திறனாளிகளுக்காக சென்சார் பொருத்தப்பட்ட ஷூ அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
இந்த அறிவியல் கண்காட்சியில் பெற்றோரும் கலந்து கொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.