திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தியை பாடமாக வைத்துவிட்டு இந்தியை எதிர்ப்பதாக பாஜக மாநில துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தூத்துக்குடியில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை எடுத்துரைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் பாலியல் குற்றச்சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்று வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்தியை எதிர்க்கும் திமுக நிர்வாகிகள், அவர்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழியை பாடமாக வைத்துள்ளதாகவும் விமர்சித்தார்.