உலகின் மிகப்பெரிய விழாவான மகா கும்பமேளாவில், மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினர்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா கடந்த ஜனவரி 13 ஆம் தேதி தொடங்கியது.
மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இந்த மகா கும்பமேளாவில் இதுவரை சுமார் 60 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளனர்.
இந்நிலையில், கும்பமேளாவில் கலந்துகொண்ட மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துடன் சேர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபாடு நடத்தினார்.