அமெரிக்காவின் எப்.பி.ஐ இயக்குநராக நியமிக்கப்பட்ட காஷ் படேல், பகவத் கீதை மீது சத்தியம் செய்து பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்டார்.
அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ.யின் புதிய இயக்குநராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த காஷ் படேலை, அதிபர் டொனால்டு டிரம்ப் நியமனம் செய்திருந்தார்.
காஷ் படேல் நியமனம் செய்யப்பட்டதை அமெரிக்க செனட் சபை உறுதிசெய்தது. அதன்படி 51-க்கு 49 என்ற வாக்குகளின் அடிப்படையில் அவரின் நியமனம் அங்கீகரிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்துக்களின் புனித நூலான பகவத்கீதை மீது சத்தியம் செய்தபடி காஷ் படேல் எப்.பி.ஐ. இயக்குனராக பதவியேற்றுக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து பேசிய அவர், அமெரிக்காவின் கூட்டாட்சி புலனாய்வு அமைப்பை வழிநடத்தும் முதல் இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வதாக தெரிவித்தார்.