கடலின் அடிப்பகுதியில் சுமார் ஆயிரம் அடி ஆழத்தில் வசிக்கக் கூடிய துடுப்பு மீன்கள் மெக்சிகோ கடற்கரையில் கரை ஒதுங்கிய சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
ஆழ்கடலில் மட்டுமே வசிக்கக் கூடிய இந்த வகை மீன்கள், பேரழிவு மற்றும் இயற்கை பேரிடர் வரக்கூடிய சமயத்தில் மட்டுமே கரைஒதுங்கும் என புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் துடுப்பு மீன்கள் பேரழிவு நாளை குறிக்கும் வகையில் டூம்ஸ்டே மீன்கள் என அழைக்கப்படுகின்றன. தற்போது துடுப்பு மீன்கள் மெக்சிகோவில் கரை ஒதுங்கியுள்ள சம்பவம், பேரழிவுக்கான அறிகுறி என பலரும் தங்களது கருத்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.