இந்திரா காந்தியை சுட்டுக் கொன்றவரின் மருமகனுக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2023-ல் மெத்தபெட்டமைன் உட்கொண்டதால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது பால்தேஜ் சிங் என்பவருக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 700 கிலோ மெத்தபெட்டமைன் கைப்பற்றப்பட்டது.
இதனையடுத்து பால்தேஜ் சிங் கைதான நிலையில், மெத்தபெட்டமைன் கடத்தல் நெட்வொர்க்கிற்கு அவர் மூளையாக செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் அவருக்கு நியூசிலாந்து நீதிமன்றம் 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.
1984-ல் இந்திரா காந்தியை சுட்டுக் கொன்ற சீக்கிய பாதுகாவலர்களில் ஒருவரான சத்வத் சிங்கின் மருமகனே பால்தேஜ் சிங் என்பது குறிப்பிடத்தக்கது.