விரைவில் இந்தியாவில் டெஸ்லா தனது விற்பனையகத்தை தொடங்கவுள்ளது.
அதற்காக டெல்லியின் ஏரோசிட்டி, மும்பையின் பந்த்ரா குர்லா பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெஸ்லா கார்கள் இந்தியாவில் குறைந்தபட்சம் 21 லட்சம் ரூபாய்க்கு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது. அதில், டெஸ்லா சைபர்ட்ரக் – 50 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும், டெஸ்லா மாடல் 2 கார்கள் 45 லட்ச ரூபாய்கும், டெஸ்லா மாடல் 3 கார்கள் 60 லட்ச ரூபாய்க்கும், டெஸ்லா மாடல் ஒய் கார்கள் 70 லட்ச ரூபாய்க்கும் கிடைக்கும் எனவும் கூறப்படுகிறது.
இதே போல டெஸ்லா மாடல் எஸ்சின் விலை 1 கோடியே 50 லட்சம் ரூபாயாகவும், டெஸ்லா மாடல் எக்ஸ்-சின் விலை 2 கோடி ரூபாயாகவும் நிர்ணயிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.