பிரதமர் நரேந்திர மோடியின் முதன்மை செயலாளராக சக்திகாந்த தாஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இதுதொர்பாக அமைச்சரவையின் நியமனக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் சக்திகாந்த தாஸ், பிரதமரின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
சக்திகாந்த தாஸ் நியமனம் பிரதமரின் பதவிக்காலத்துடன் இணைந்து முடிவடையும் அல்லது மறு உத்தரவு வரும் வரை நீடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய பொருளாதாரம் குறித்த தெளிவான கண்ணோட்டம் கொண்டவரான சக்தி காந்த தாசை, பிரதமர் மோடி முதன்மை ஆலோசகராக நியமித்து இருப்பது நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றத்தை கொண்டு வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
பி.கே. மிஸ்ரா கடந்த 2019 ஆண்டு முதல் பிரதமரின் முதன்மைச் செயலாளராக இருந்து வருகிறார்.