சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது.
9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில், நேற்று லாகூரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸை வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 351 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 143 பந்துகளில் 165 ரன்கள் அடித்து விளாசினார். ஆஸ்திரேலியா தரப்பில் பென் துவார்ஷியஸ் 3 விக்கெட்டுகளும், ஆடம் ஜம்பா மற்றும் லபுஸ்சேன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
தொடர்ந்து 352 ரன்கள் இலக்குடன் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 47.3 ஓவர்களில் 356 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக ஜோஸ் இங்கிஸ் 120 ரன்கள் குவித்தார். இதன்மூலம் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றியைக் கைப்பற்றியுள்ளது.