சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
துபாய் சர்வதேச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் வெற்றி வாகை சூடிய இந்தியா, பாகிஸ்தானையைும் வீழ்த்துவதற்கு தீவிரம் காட்டி வருகிறது.
அதேநேரம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் பாகிஸ்தான் அணி உள்ளது. முதல் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்ததால் ரன்ரேட் மைனஸுக்குள் சென்ற நிலையில், இந்த ஆட்டத்திலும் தோல்வி அடைந்தால் பாகிஸ்தான் அணி தொடரை விட்டே வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால், விறுவிறுப்பிற்கு பஞ்சமின்றி இந்தியா – பாகிஸ்தான் போட்டி நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே போட்டியை நேரலையில் காண சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனன..