சேலத்தில் காதல் திருமணம் செய்த இளைஞரின் சொத்துக்களை பெண்ணின் பெயரில் எழுதிவைக்க கூறி கட்டப்பஞ்சாயத்து செய்த SI ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
திமிரக்கோட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் மற்றும் சாருலதா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் பாதுகாப்பு கோரி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து இருவீட்டாரையும் போலீசார் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சாருலதாவுடன் விக்னேஷ் சரியாக வாழ்க்கை நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை எனவும் அதனால் சொத்துகளை மகளின் பெயரில் எழுதி வைக்க வேண்டும் எனவும் பெண்வீட்டார் கூறியதாக தெரிகிறது. தொடர்ந்து விக்னேஷுக்கு சேர வேண்டிய சொத்துகளை சாருலதா பெயரில் எழுதி வாங்கியதாக போலீசாரே பாண்டு பத்திரத்தில் கையொப்பம் பெற்று பெண் வீட்டாரிடம் கொடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் சர்ச்சையையான நிலையில், ஓமலூர் காவல் உதவி ஆய்வாளர் பிரபாகரன் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.