பர்கூர் அருகே நடைபெற்ற எருது விடும் விழாவில் ஏராளமான காளைகள் பங்கேற்று இலக்கை நோக்கி சீறிப் பாய்ந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லப்பாடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு எருதுவிடும் விழா நடைபெற்றது. இதில், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் ரே்ந்த 250 காளைகள் பங்கேற்றன.
வாடிவாசலில் இருந்து அவிழ்த்துவிடப்பட்ட காளைகள், 120 மீட்டர் இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்து சென்றன. குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி முதல் பரிசு பெற்ற காளைக்கு ஒரு லட்சம் ரூபாயும், 2வது பரிசு பெற்ற காளைக்கு 80 ஆயிரம் ரூபாயும் வழங்கப்பட்டது. இந்த விழாவை திரளான மக்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.