பெஞ்சல் புயல் நிவாரணம் வழங்குவதில் ராமநாதபுரம் மாவட்டம் புறக்கணிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், செங்கல்பட்டு, தருமபுரி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 18 மாவட்ட விவசாயிகளுக்கு 498 கோடியே 80 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகையினை ஒதுக்கி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.
ஆனால், ராமநாதபுரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயலால் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், நிவாரண தொகையில் ராமநாதபுரம் மாவட்டம் விடுபட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாய் வரை நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.