தாம்பரம் அருகே மக்கள் நன்கொடையில் கட்டப்பட்ட கோயில் மண்டபத்தின் கல்வெட்டில் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சரின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அனகாபுத்தூர் பகுதியில் உள்ள ஆலவட்டம்மன் கோயில் கடந்த 50 ஆண்டுகளாக அப்பகுதி மக்களால் வணங்கப்பட்டு வருகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் இக்கோயிலில், பல ஆண்டுகளாக பொதுமக்கள் நன்கொடை மூலம் திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகிறது. அண்மையில், பக்தர்களின் காணிக்கையை கொண்டு பொங்கல் வைக்கும் மண்டபம் அமைக்கப்பட்டது.
ஆனால் விளம்பரம் தேடும் நோக்கத்துடன் மண்டபத்தின் கல்வெட்டில் முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்களின் பெயர்கள் பொரிக்கப்பட்டுள்ளன. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள், கல்வெட்டை உடனடியாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்