சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே சாலையின் தடுப்பு சுவரில் கார் மோதிய விபத்தில் பெண் உயிரிழந்தார்.
சென்னை வேப்பேரியைச் சேர்ந்த முன்னாள் கப்பல் கேப்டனான ஹரி கோவிந்த் சம்பத் என்பவர் மனைவி தீபஹரி உடன் கேரளாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தார்.
கோவை – சேலம் நெடுஞ்சாலையில் சங்ககிரி அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில், தீபஹரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.