சினிமாவில் நடிக்க சென்றது தாம் செய்த பெரிய தவறு என நடிகை மும்தாஜ் தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் நடைபெற்ற பெண்கள் மதரஸா திறப்பு விழாவில் நடிகை மும்தாஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், என் வாழ்க்கை மற்றும் என்ன செய்து கொண்டிருந்தேன் என உங்கள் அனைவருக்கும் தெரியும் என தெரிவித்தார்.
என்னை நிறைய பேர் திட்டி இருப்பீர்கள் என்றும், கண்ணீர் மல்க அழுது கொண்டே இன்று உங்கள் முன்னே நிற்பதாக தெரிவித்தார். தாம் சிறிய வயதாக இருக்கும்போது இதுபோன்ற மதரஸாகள் இல்லாததால் சினிமாவில் நடிக்க சென்றதாக தெரிவித்தார்.