கடலூர் மாவட்டம், வடலூர் அருகே பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பெங்களூரில் இருந்து திருநள்ளாறுக்கு கர்நாடகா அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. வடலூர் நான்குமுனை சந்திப்பு அருகே விருத்தாசலத்தில் இருந்து கடலூர் நோக்கி சென்ற லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதனையடுத்து அவர்கள் சிகிச்சைககாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மிணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.