லால்குடியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி கீழ வீதியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் நடக்கும் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு தெற்கு வீதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில் 61-ம் ஆண்டு பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு விழா கமிட்டி சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. லால்குடி வருவாய் கோட்டாட்சியர் உறுதிமொழி வாசித்து, கொடியசைத்து ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.
இதில் திருச்சி, தஞ்சாவூர், பெரம்பலூர், மதுரை, திண்டுக்கல், அரியலூர், புதுக்கோட்டை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டன. , 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.