கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி கன்று குட்டி உயிரிழந்தது. கூடன் ஏரி அருகே விளைநிலத்தில் புகுந்த காட்டு யானை, அங்கிருந்த பம்பு செட்டுக்களை சேதப்படுத்தியது.
தொடர்ந்து அங்கிருந்த கன்று குட்டியை காட்டு யானை தந்தத்தால் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், யானையை விரட்ட வனத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.