டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.
இதுதொடர்பான புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமித்ஷா, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தாவை வாழ்த்தியதாக தெரிவித்துள்ளார்.
அவரது பதவிக்காலம் நிச்சயமாக டெல்லியை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் எனவும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார். மேலும், அனைத்து மக்களின் நம்பிக்கைகளையும், விருப்பங்களையும் பாஜக அரசு நிறைவேற்றும் எனவும் அமித்ஷா தெரிவித்துள்ளார்.