மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் அவரது சிலைக்கு, அரசு சார்பில் அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்றம் வளாகத்தி உள்ள அவரது சிலைக்கு அரசு அதிகாரிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தமிழக அரசு சார்பில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறைச் செயலாளர் ராஜாராமன், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன், கூடுதல் இயக்குநர் அன்பு சோழன், இணை இயக்குநர் தமிழ் செல்வராஜன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.