கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமியை விசாரிக்கவில்லை என்றால் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் இறங்குவோம் என அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த புகழேந்தி தெரிவித்துள்ளார்.
காமராஜர் சாலையில் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்திய பின் பேட்டியளித்த அவர், கொடநாடு சம்பவத்தில் எடப்பாடி பழனிசாமியை தமிழக அரசு ஏன் விசாரிக்க வில்லை என்பது மர்மமாக உள்ளதாகவும் கூறினார்.