திருவாரூரில், தண்டாவாளத்தை விட்டு கீழே இறங்கிய சரக்கு ரயில் இன்ஜினை, ரயில்வே அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு மீட்டனர்.
திருவாரூரில் இருந்து ஜல்லிகளை ஏற்றிக்கொண்டு 12 பெட்டிகளுடன் சரக்கு ரயில் திருவாரூர் மாவட்டம் பேரளம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் இன்ஜினின் சக்கரங்கள் தண்டவாளத்தை விட்டு கீழே இறங்கி ஜல்லி கற்களில் சிறிது தூரம் ஓடி நின்றது.
இதனை தொடர்ந்து தடம் புரண்ட ரயிலை மாற்று எஞ்சின் மூலம் ரயில்வே அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். பின்னர் தடம் புரண்ட ரயில் இன்ஜினை விரைந்து செயல்பட்டு மீட்டனர். இதனால், அகஸ்தியன் பள்ளியில் இருந்து திருவாரூருக்கு வர வேண்டிய ரயில்கள் தாமதமாகின.