திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் சுமார் 2000 ஏக்கர் நெல் மணிகள் நிலத்திலேயே உதிர்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
சிறு நாயக்கன்பட்டி பகுதியைச் சுற்றியுள்ள குண்டலபட்டி, சிவஞானபுரம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேலாக விவசாயிகள் நெல் விவசாயம் செய்துள்ளனர்.
நிலக்கோட்டை பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பாக பிப்ரவரி முதல் வாரத்தில் 5 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பது வழக்கம். ஆனால், இந்தாண்டு கொள்முதல் நிலையங்கள் இதுவரை திறக்கப்படாததால், விளைந்த நெல் மணிகள் அறுவடை செய்யாமல் நிலத்திலேயே உதிர்ந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே, நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட நிர்வாகம் உடனடியாக திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.