ஜெர்மனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஜெர்மனி அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிரெட்ரிக் மெர்ஸுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜெர்மனியின் தேர்தல் சூழ்நிலைகளுக்கும், அமெரிக்காவின் அரசியல் சூழ்நிலைக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை சுட்டிக்காட்டியுள்ள ட்ரம்ப், ஜெர்மன் மக்கள் பொதுஅறிவு இல்லாத நிகழ்ச்சி நிரலால் சோர்வடைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இதேபோன்று, ஜெர்மனி பொதுத்தேர்தலில் வெற்றி பெற்ற கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியத்திற்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.