ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து குறித்து அவரிடமே கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. சட்டமன்ற அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய செங்கோட்டையன், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அதிமுக தொண்டர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், அதிமுக ஆட்சி மீண்டும் மலர்வதற்கு ஏதுவாகவும் ஜெயலலிதா பிறந்த நாள் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
மேலும், ஆடும் ஓநாயும் ஒன்று சேர முடியாது என்ற இபிஎஸ் கருத்து குறித்து அவரிடமே கேளுங்கள் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பதிலளித்தார்.