சென்னை போயஸ் கார்டனில், ஜெயலலிதா இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தில் ஜெயலலிதா பிறந்த நாள் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் வேதா நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,
தீபாவின் அழைப்பை ஏற்று ஜெயலலிதா உருவப் படத்திற்கு மரியாதை செலுத்த வேதா நிலையத்திற்கு வந்ததாகவும், இதுவரை 4 முறை ஜெயலலிதா இல்லத்திற்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
ஜெயலலிதா இங்கே இல்லை என்றாலும், அவரது நினைவுகள் இந்த வீட்டில் தான் இருப்பதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.