தெலங்கானாவில் இடிந்து விழுந்த சுரங்கப் பாதையில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
நாகர்கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அருகே சுரங்கப் பாதை கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை 14 கிலோ மீட்டர் தூரத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கப் பாதை திடீரென இடிந்து விழுந்தது.
இடிபாடுகளுக்குள் 8 பேர் சிக்கியுள்ளதால், அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 48 மணி நேரமாக சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை வெளியேற்ற, உள்ளே இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை ஈடுபட்டுள்ளது.
சுரங்கப் பாதைக்குள் சேறும், சகதியும் அதிகளவில் இருப்பதால் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.