திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் தமிழகம் மற்றும் வட மாநில இளைஞர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் அரசு பேருந்து கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
பல்லடம் பேருந்து நிலையம் எதிர்புறமாக உள்ள அரசு மதுபானக் கூடத்தில் தூத்துக்குடியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் மது அருந்த சென்றுள்ளனர். அதே நேரத்தில் வடமாநிலத்தைச் 4 இளைஞர்களும் மது அருந்த வந்துள்ளனர்.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகளப்பாக மாறியுள்ளது. முதலில் வடமாநில இளைஞர்கள் தாக்குதலை தொடங்கியதாக கூறப்படும் நிலையில், பின்னர் தமிழக இளைஞர்கள் வடமாநில இளைஞர்களை துரத்தி துரத்தி தாக்கியுள்ளனர்.
அப்போது பல்லடம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தின் கண்ணாடியை இளைஞர்கள் உடைத்துள்ளனர்.
இருதரப்பு மோதலில் காயமடைந்த தமிழக இளைஞர்கள் 4 பேர் மற்றும் வடமாநில இளைஞர்கள் 2 பேர் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிசிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இளைஞர்கள் போலீசாரின் காலில் விழுந்து கெஞ்சும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.