மகா சிவராத்திரியை முன்னிட்டு திண்டுக்கல் மலர் சந்தையில் 25 டன் பூக்கள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
திண்டுக்கல் நகர் பகுதியில் செயல்படும் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா வணிக வளாக பூச்சந்தைக்கு திண்டுக்கல் மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து கொண்டு வரப்படும் பூக்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மகா சிவராத்திரியை முன்னிட்டு பூக்களின் வரத்து அதிகரித்து விலை குறைந்து காணப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ மல்லிகைப் பூ ஆயிரத்து 500 ரூபாய்க்கும், ஜாதிப் பூ 600 ரூபாய்க்கும், முல்லைப் பூ 800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவதாகவும் கூறினார்.
இருப்பினும், மகா சிவராத்திரியை முன்னிட்டு 25 டன் பூக்கள் விற்பனையானதாக வியாபாரிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.