சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தானை பந்தாடி இந்திய அணி பெற்ற மாபெரும் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்கள், பட்டாசுகள் வெடித்தும், நடனமாடியும் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இந்திய அணியின் வெற்றியை கொண்டாடிய ரசிகர்களால் பெரும்பாலான இடங்கள் திக்குமுக்காடின. மூவர்ண கொடியை ஏந்தியவாறு ரசிகர்கள் மெய் மறந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், தலைநகர் டெல்லியிலும் இந்திய அணியின் வெற்றிக் கொண்டாட்டம் களைகட்டியது. கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக வாணவேடிக்கைள் இட்டு ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தனர்.