சேலத்தில் 30-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களைத் திருடிய தறி தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
எடப்பாடி, கொங்கணாபுரம், சங்ககிரி, ஓமலூர், மகுடஞ்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் டிவிஎஸ் எக்ஸ்எல் இருசக்கர வாகனங்கள் திருடப்பட்டு வந்தன.
இதுகுறித்து புகார்கள் குவிந்த நிலையில் திருட்டில் ஈடுபட்டு வந்த தாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 21 இருசக்கர வானங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.