ஜெர்மனியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஒலாப் ஸ்கால்ஸ் தலைமையிலான சமூக ஜனநாயகக் கட்சி படுதோல்வியடைந்தது.
அக்கட்சிக்கு 16 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்துள்ளது. எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் சிஎஸ்யு/சிடியு அணி 28.5 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது.
இதைத்தொடர்ந்து ஜெர்மனியின் புதிய பிரதமராக பிரைடுரிச் மெர்ஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டு விரைவில் பதவியேற்பார் என எதிர்க்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே ஆளுங்கட்சியை பின்னுக்குத்தள்ளி தீவிர வலதுசாரிக் கூட்டணி 20 சதவிகித வாக்குகளுடன் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.