இந்தியாவுடன் வங்கதேசம் எந்த வகையான உறவுகளை விரும்புகிறது என்பதை முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசியுள்ள அவர்,
வங்கதேச இடைக்கால அரசாங்கம் தொடர்ந்து இந்தியாவுக்கு விரோதமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறது என கூறி கண்டனம் தெரிவித்தார்.
வங்கதேசத்தில் நிலைமை சீரடைய வேண்டும் என்று நரேந்திர மோடி அரசு தெளிவான சமிக்ஞையை அனுப்பியுள்ளது எனவும் அவர் கூறினார்.
பாகிஸ்தானுடனான உறவை புதுப்பிக்க ஆர்வம் காட்டும் வங்கதேச அரசுக்கு ஜெய்சங்கரின் பேச்சு ஓர் நேரடி எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.