சமீபத்தில் புதிய தலைமைத் தேர்தல் கமிஷனராக பதவியேற்ற ஞானேஷ் குமார் தனது குடும்பத்தினருடன் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இதுகுறித்து பேசிய அவர், திரிவேணி சங்கமத்தில் நீராடியது உணர்வுப்பூர்வமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். கும்பமேளாவில் இதுவரை 60 கோடி பக்தர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி உள்ளதாக உத்தர பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இந்த விழா நிறைவு பெறும்போது சுமார் 65 கோடி பேர் புனித நீராடி இருப்பார்கள் என்றும் அரசு தெரிவித்துள்ளது.