நீலகிரி மாவட்டம் உதகை அருகே கோயிலுக்குள் கரடி உலாவிய சிசிடிவி காட்சி வெளியாகி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
உதகை சுற்றுவட்டார பகுதிகளில் புலி, கரடி உள்ளிட்ட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அந்தவகையில் வேல்வியூப் பகுதியில் உள்ள ராஜராஜேஸ்வரி கோயிலுக்குள் கரடி ஒன்று புகுந்து பூஜை பொருட்களை சேதப்படுத்தியுள்ளது.
இது குறித்த சிசிடிவி காட்சி வெளியான நிலையில் அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் கரடியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.