உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தனது பதவியில் இருந்து விலக தயார் என அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, தலைநகர் கீவில் அதிபர் ஜெலென்ஸ்கி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
உக்ரைனில் அமைதி திரும்ப, தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் அதற்கு தயாராகவே இருப்பதாகத் தெரிவித்தார்.
உக்ரைனுக்கு நேட்டோ உறுப்பினர் பதவி கொடுத்தால் அதிபர் பதவியை விட்டு விலகத் தயாராக உள்ளதாகவும் அவர் கூறினார்.
இந்த பிராந்தியத்தில் அமைதி திரும்ப உக்ரைனின் கூட்டாளியாக ட்ரம்ப் இருக்க வேண்டும் எனவும் ஜெலென்ஸ்கி கேட்டுக் கொண்டுள்ளார்.