மயிலாடுதுறையில் 2-ம் நாள் மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்றது.
மயிலாடுதுறை சப்தஸ்வரங்கள் அறக்கட்டளை சார்பில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மாயூரநாதர் கோவிலில் 19-ம் ஆண்டு மயூர நாட்டியாஞ்சலி விழா நடைபெற்று வருகிறது.
மயூர நாட்டியாஞ்சலி 2-ம் நாள் நிகழ்ச்சியில் மல்லாரி, வர்ணம், தில்லானா போன்ற நாட்டிய நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டது. கோவை வழுவூர் கிளாசிக்கல் பரதநாட்டிய ஹார்ட் சென்டர், ராஜமணியம்மாள் கலைக்கூடம் குழுவினரின் அசத்தலான பரதநாட்டிய நிகழ்வுகள் பார்வையாளர்களை கவர்ந்தது.