திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே சுவர் விளம்பரம் எழுதுவதில் திமுக, பாஜகவினர் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
திருத்தணி நகரில் ரயில் நிலையம் அருகே மா.பொ.சி. சாலை சுவரில் பாஜகவினர் தாமரை சின்னம் வரைந்தனர். அங்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுகவினர் சுவர் விளம்பரம் எழுத முயற்சி செய்தனர்.
அதை பாஜகவினர் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினருக்கும் இடைய வாக்குவாதம் ஏற்பட்டது.