தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் இந்தி எழுத்துகள் அழிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பிரதமர் மோடியின் படத்தை வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து திமுகவினர் ரயில் நிலையத்தில் உள்ள இந்தி எழுத்துக்களை கருப்பு மையால் அழிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கடையநல்லூர் ரயில் நிலையத்தில் உள்ள காத்திருப்போர் அறையில் பிரதமர் மோடியின் படத்தை வைத்து போராட்டம் நடத்தினர்.