தெலங்கானா சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் எலிவளை சுரங்க தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய்த் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக பாறையைக் குடைந்து சுரங்கம் தோண்டும் பணியின்போது சுரங்கத்தின் மேற்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
சுரங்கத்துக்குள் 14 கிலோ மீட்டர் தொலைவில் மேற்பகுதி இடிந்து விழுந்ததால், 2 பொறியாளா்கள், 6 தொழிலாளா்கள் என மொத்தம் 8 போ் சிக்கிக் கொண்டனர். தொழிலாளர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், இதுவரை சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை நெருங்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2023ஆம் ஆண்டு உத்தரகாண்ட் சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்ட எலிவளை சுரங்கத் தொழிலாளர்கள் மீட்புப் பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் எண்டோஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் கேமராக்கள் உள்ளிட்ட மேம்பட்ட உபகரணங்கள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றன.