70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய புகாரில் திருமங்கலம் சார் பதிவாளர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கிழவனேரி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரின் 3 ஏக்கர் நிலத்தை கிரையம் செய்வதற்காக செந்தில்குமார் என்பவர் திருமங்கலம் சார்பதிவாளர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது, செந்தில்குமாரிடம் 70 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்று சார் பதிவாளர் பாண்டியராஜன் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் எழுத்தர் பால மணிகண்டன், சார் பதிவாளர் மணிகண்டன் ஆகியோரை கைது செய்தனர்.