அம்பலமான திமுகவின் போலி நாடகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு! 
Jan 14, 2026, 08:35 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அம்பலமான திமுகவின் போலி நாடகம் : அண்ணாமலை குற்றச்சாட்டு! 

Murugesan M by Murugesan M
Feb 25, 2025, 11:44 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற,  மும்மொழிக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

புதிய தேசிய கல்விக் கொள்கையில் உள்ள மும்மொழிக் கொள்கையை, இந்தித் திணிப்பு என்று பொய் கூறி, சில திமுக நபர்கள், இந்தி எழுத்துக்களை அழிக்கிறோம் என்று கருப்பு பெயின்ட் டப்பாவைத் தூக்கிக் கொண்டுச் சுற்றித் திரிவதைக் காண நேர்கிறது என தெரிவித்துள்ளார்.

பல ஆண்டு காலமாகத் தமிழகத்தில் செய்து வரும் அதே மொழி அரசியலை, தமிழகத்தில் பெருகிவரும் போதைப் பொருள் புழக்கம், பாலியல் குற்றங்கள், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, அரசு ஊழியர்கள், காவலர்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை என தனது ஒட்டு மொத்த நிர்வாகத் தோல்வியையும் மடைமாற்ற, மீண்டும் கையில் எடுத்திருக்கிறது திமுக என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

கருப்பு பெயின்ட் டப்பாவுடன் திரியும் திமுக கும்பல், அப்படியே அமலாக்கத்துறை இயக்குநரகம் மற்றும் வருமான வரி அலுவலகத்திற்கும் செல்லுமாறு நாங்கள் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த அலுவலகங்களின் முகவரிகளை, அடிக்கடி அங்கு செல்லும் ஊழல் திமுக அமைச்சர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

மக்களைக் குழப்புவதையே தொழிலாகக் கொண்ட திமுகவினர், தங்கள் குடும்பங்களுக்கு ஒரு நியாயம், தமிழக மக்களுக்கு ஒரு நியாயம் என்றே எப்போதும் நடந்து கொள்வார்கள். மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளைக் கற்றுக் கொடுக்கும் CBSE/மெட்ரிகுலேஷன் பள்ளிகளை நடத்துவார்கள் அல்லது தங்கள் குழந்தைகள்/பேரக்குழந்தைகளை அத்தகைய பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைப்பார்கள்.

தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்த்து விட்டு, அவர்கள் எதிர்காலம் நன்றாக இருப்பதை உறுதி செய்துவிட்டு, அரசுப் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான தவறான கருத்துக்களையும், பிரச்சாரத்தையும் பரப்புவார்கள் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதான் ஒவ்வொரு விஷயத்திலும், திமுகவின் முரணான நிலைப்பாடு. இதனை மக்கள் புரிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, இந்தித் திணிப்பு என்ற மாயையை உருவாக்கி, அதன் பின்னர் ஒளிந்து கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

திமுகவின் இந்த போலியான அரசியலுக்குப் பலியானவர்கள் எத்தனை பேர். அவர்களின் பெயர்கள் முதலமைச்சருக்கோ, துணை முதலமைச்சருக்கோ தெரியுமா? அவர்கள் குடும்பங்கள் இப்போது எங்கே, எப்படி, என்ன நிலையில் இருக்கின்றன என்பது திமுகவினருக்குத் தெரியுமா? திமுகவில் மேல்மட்ட அதிகாரத்தில் இருந்தவர்கள் யாராவது ஒருவர் மொழிப் போர் தியாகி ஆகியிருக்கிறாரா? எத்தனை நாட்கள்தான் இப்படி அப்பாவிகளின் உணர்வைத் தூண்டி பலிகடா ஆக்கிவிட்டு, அந்த நெருப்பில் குளிர்காய்வீர்கள்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள், ஓடி ஒளியாமல், எங்களின் சில கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

திமுக அமைச்சர்கள் தொடங்கி கவுன்சிலர்கள் வரை, தங்கள் குழந்தைகளை 3 மொழிகள் அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகள் கற்பிக்கப்படும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும்போது, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு ஏன் அந்த வாய்ப்பு வழங்கப்படுவதில்லை? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுக தலைவர்களால் நடத்தப்படும் சிபிஎஸ்இ/மெட்ரிகுலேஷன் பள்ளிகளில், மாணவர்களுக்கு இந்தி உள்ளிட்ட பிற இந்திய மொழிகள் மற்றும் சர்வதேச மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மட்டும் மூன்றாவது மொழியைக் கற்கும் உரிமை ஏன் மறுக்கப்படுகிறது? கூடுதலாக ஒரு மொழியைக் கற்கும் உரிமை, தனியார் பள்ளிகளில் படிக்கும் வசதியான குடும்பக் குழந்தைகளுக்கு மட்டுமேயான ஒரு உரிமையா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

நமது மாண்புமிகு மத்திய கல்வித் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் அவர்கள், மும்மொழிக் கொள்கையில், இந்தி மொழி கட்டாயம் இல்லை என்றும், நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட பல மொழிகளில், இந்தியும் ஒரு விருப்ப மொழி மட்டுமே என்றும் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய கல்விக் கொள்கை 2020-யிலும், இதுவே குறிப்பிடப்பட்டுள்ளது. திமுக ஏன் இந்தித் திணிப்பு என்று வேண்டுமென்றே பொய் கூறி மக்களை குழப்புகிறது? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுக்கின்படி, தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உருது, இந்தி, குஜராத்தி பேசும் மக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த மக்கள்தொகையில் 11.65%. தற்போது, இந்தியாவில் சுமார் 25க்கும் மேற்பட்ட மொழிகள், திராவிட மொழிகளாக வரையறுக்கப்பட்டுள்ளன. உங்கள் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துக் கொண்டு, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகளில் ஒன்றை மூன்றாவது மொழியாகக் கற்கவிடாமல், தமிழக அரசுப் பள்ளி மாணவர்களை திமுக தடுப்பது ஏன்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

திமுகவினரின் நிறுவனரான முன்னாள் முதல்வர் அண்ணாதுரை அவர்கள், மற்ற மாநிலங்களும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொண்டால், தமிழ்நாடும் மும்மொழிக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறினாரே. அது திரு. மு.க.ஸ்டாலினுக்குத் தெரியுமா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழைக் காப்பாற்றுகிறோம் என்று நாடகமாடும் முதலமைச்சர், உயர்நிலைப்பள்ளி அளவில் கடந்த 2017 – 18 ஆண்டுகளில், 51.34% ஆக இருந்த தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் விகிதம், தற்போது 2023 – 24 ஆண்டில், 44.35% ஆகக் குறைந்திருப்பதும், 54.16% ஆக இருந்த மேல்நிலைப் பள்ளி தமிழ் வழிக் கல்வி மாணவர்கள் விகிதம், தற்போது 44.7% ஆக குறைந்திருப்பதும் ஏன் என்று கூறுவாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழக மக்கள், ஆட்சியாளர்களின் வெளிப்படைத்தன்மைக்கு உரியவர்கள். பாசாங்குத்தனத்திற்கு அல்ல. முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள், இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் துணிவாரா, அல்லது வழக்கம்போல பொய்யான கதைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொள்வாரா? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

பொதுமக்கள் வரிப்பணத்தில் ஆண்டுக்கு சுமார் ரூ. 44,000 கோடியை, பள்ளிக்கல்வித் துறைக்குச் செலவழித்துவிட்டு, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளின் வளர்ச்சிக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது திமுக. இரண்டு மொழிக் கொள்கை என்றால், தமிழகத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் இரண்டு மொழி மட்டுமே பயிற்றுவிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

பணமிருந்தால் எத்தனை மொழிகள் வேண்டுமானாலும் படிக்கலாம், கொள்கை எல்லாம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் சாதாரண ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவ மாணவியருக்கு மட்டும்தான் என்ற திமுகவின் இரட்டை வேடம் இனியும் செல்லுபடியாகாது என தெரிவித்துள்ளார்.

திமுக இதற்குப் பின்னரும், இந்தி எதிர்ப்பு என்று நாடகமாடுவதாக இருந்தால், தனது இந்தி கூட்டணிக் கட்சியினரையும் தமிழகத்துக்குக் கூட்டி வந்து, அவர்கள் கையிலும் கருப்பு பெயின்ட் டப்பாவைக் கொடுத்து, தனது இந்தி எதிர்ப்பைக் காட்டட்டும் என அண்ணாமலை  தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalaidmk stalinnew education policy 2020DMK's fake drama exposed: Annamalai allegation!
ShareTweetSendShare
Previous Post

தெலங்கானா சுரங்க விபத்து மீட்புப்பணி – எலிவளை சுரங்க தொழிலாளர்கள் வரவழைப்பு!

Next Post

சேலம் : கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்!

Related News

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

Load More

அண்மைச் செய்திகள்

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies