செங்கல்பட்டு மாவட்டம் பீரக்கண்காரணையில் குடியிருப்பு வழியாக மழைநீரை வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து குடியிருப்புவாசிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பீரக்கண்காரணையில் உள்ள ரோஜா தோட்டம் பகுதியில் கால்வாயில் இருந்து மழை நீரை வெளியேறுவதற்காக ராட்சத பள்ளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள், மழைக் காலங்களில் தங்கள் பகுதியில் அதிக தண்ணீர் தேங்குவதாக வேதனை தெரிவித்தனர். மேலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகாரளிக்க விடாமல் காவல்துறையினர் தடுப்பதாகவும் குற்றஞ்சாட்டினர்.