சென்னையை அடுத்த பூந்தமல்லி அருகே பட்டப்பகலில் மர்ம நபர் வீடு புகுந்து செல்போன் திருடும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
மகாலட்சுமி நகர் 5-வது தெருவில் வசித்து வரும் தனியார் நிறுவன ஊழியர் சந்தனமாரி, இரவுப்பணி முடிந்து காலை வீடு திரும்பியுள்ளார்.
செல்போனை வீட்டில் வைத்துவிட்டு அவர் உறங்கிய நிலையில், வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர் செல்போனை திருடிக்கொண்டு மாஸ்க் அணிந்தபடி தப்பிச் சென்றுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.