சேலத்தில் வாட்ஸ் ஆப் குழு தொடங்கி யானை தந்தங்களை விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
மலை கிராமங்களில் யானை தந்தங்கள் விற்பனை செய்யப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திய வனத்துறையினர், கருமந்துறை – அரூர் சாலையில் இரு யானை தந்தங்கள் விற்பனை செய்ய முயன்றவர்களை சுற்றி வளைத்தனர்.
அவர்களிடம் இருந்து 2 யானை தந்தங்கள், இருசக்கர வாகனம் மற்றும் 7 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.