திண்டுக்கல் அருகே உறை கிணற்றை தூர்வாருவதாக பொதுமக்களை ஏமாற்றி கையொப்பம் பெற்று, குடியிருப்பு பகுதிகளை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கெங்கையூர் கிராமத்தில் உள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில், 4 தலைமுறைகளுக்கும் மேலாக 50-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த வைர பெருமாள் தங்களிடம் ஏமாற்றி கையெழுத்து பெற்று, குடியிருப்புகளை அகற்றி நிலத்தை ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.