மகா கும்பமேளா திருவிழாவில் கின்னஸ் சாதனை முயற்சியாக 15 ஆயிரம் தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
பிரயாக்ராஜ் நகரில் ஜனவரி 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளாவில் நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். நாளையுடன் திருவிழா நிறைவடையவுள்ள நிலையில், தற்போது வரை 62 கோடி பேர் புனித நீராடி உள்ளனர். இந்நிலையில், பிரயாக்ராஜ் நகரில் தூய்மைப் பணியை மேற்கொள்ள 15,000 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், இது கின்னஸ் சாதனை முயற்சி எனவும் உத்தரப்பிரதேச அரசு தெரிவித்துள்ளது.
இதன் முடிவுகள் வரும் 27ஆம் தேதி அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தூய்மைப் பணியில் ஈடுபடும் பணியாளர்களின் கைகளில் கியூஆர் கோடு கொண்ட பட்டை வழங்கப்பட்டுள்ளதாகவும், தூய்மைப் பணிகளை தணிக்கை குழுவினர் கண்காணிப்பார்கள் எனவும் அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.